​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
TNPSC முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Published : Feb 21, 2020 3:22 PM

TNPSC முறைகேடு வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Feb 21, 2020 3:22 PM

TNPSC முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது குறித்து தமிழக அரசு மற்றும் சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முறைகேடு புகாரில் இதுவரை கீழ்மட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய மனுதாரர்,  டிஎன்பிஎஸ்சியின் அனைத்து நிலைகளிலும் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடுமாறு கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு, தலைமைச் செயலாளர், சிபிஐ, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.