​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கு அபராதம்

Published : Feb 21, 2020 2:26 PM



மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனருக்கு அபராதம்

Feb 21, 2020 2:26 PM

கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் அதிவேகமாக லாரி ஓட்டி வந்து கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தியதாக ஓட்டுநருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சின்னசேலம் அருகே கணியமூர் கைகாட்டி என்ற இடத்தில் சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகமாக வந்த லாரி, பேரி கார்டு மீது மோதி தடுப்புச்சுவர் மேல் ஏறியதுடன் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா கம்பத்தை இடித்து தள்ளியது.

பொதுமக்கள், போலீசார் இணைந்து அமைந்த 2 லட்சம் மதிப்புள்ள கண்காணிப்புக் கேமராக்கள் இதில் சேதமடைந்த நிலையில், லாரி ஓட்டுநர் நரேஷை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். சேதமடைந்த கேமராவை சீர் செய்வதற்காக நரேஷிடம் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.