​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்

Published : Feb 21, 2020 12:10 PM

மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றம்

Feb 21, 2020 12:10 PM

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ,  வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக அரசை விமர்சித்து ஸ்டாலின் பேசியதாக கூறி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி மு.க.ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கை எம்பி, எம்எல்ஏ தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி ஆணையிட்டார்.