​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க இளம் ராப் பாடகர் பாப் ஸ்மோக் கொலை

Published : Feb 21, 2020 8:33 AM

அமெரிக்க இளம் ராப் பாடகர் பாப் ஸ்மோக் கொலை

Feb 21, 2020 8:33 AM

அமெரிக்காவை சேர்ந்த பிரபல இளம் ராப் பாடகரான பாப் ஸ்மோக், கொள்ளைக் கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 20 வயதே ஆன பஷர் பராகா ஜாக்சன் என்ற பாப் ஸ்மோக்குக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு.

இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் பாப் ஸ்மோக் தங்கியிருந்த வீட்டிற்குள் கொள்ளை கும்பல் ஒன்று புகுந்தது. கொள்ளை கும்பலை விரட்டியடிக்க பாப் ஸ்மோக் போராடியபோது, கும்பலை சேர்ந்த ஒரு நபர் பாப் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்து உயிரிழந்தார்.

இளம் ராப் பாடகர் கொலை செய்யப்பட்டது அந்நாட்டு ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.