​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி...!

Published : Feb 20, 2020 4:48 PM

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் நடக்கும் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி...!

Feb 20, 2020 4:48 PM

மகளிர் கால்பந்து ஆசியக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தலாம் என  ஆசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஆசியகோப்பை கால்பந்து போட்டிகளை இந்தியாவில் நடத்தலாம் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு(ASF) தெரிவித்து உள்ளது. இதற்காக நவி மும்பையில் உள்ள டி ஒய் பாட்டீல் ஸ்டேடியம், அகமதாபாத்தில் உள்ள டிரான்ஸ் ஸ்டேடியா அரினா மற்றும் கோவாவின் ஃபடோர்டா ஸ்டேடியம் ஆகிய மைதானங்களை தேர்வு செய்துள்ளது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். இந்த போட்டிகளை நடத்த சீன தைபே, உஸ்பெகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் விண்ணப்பித்திருந்த நிலையில் இந்தியா இந்த போட்டிகளை நடத்தலாம் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே 1979 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டிகளை இந்தியா நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.