​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய பிரத்யேக டிராக் செயலி - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published : Feb 20, 2020 12:29 PM

ஆம்புலன்ஸ் வரும் இடத்தை அறிய பிரத்யேக டிராக் செயலி - அமைச்சர் விஜயபாஸ்கர்

Feb 20, 2020 12:29 PM

வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு வந்த 55,051 பேரில் 2358 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

46 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரானா பாதிப்பு இல்லை என தெரியவந்ததாகவும் அமைச்சர் கூறினார். சீனாவின் வூகான் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ள 84 தமிழர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் இவற்றை கூறியிருக்கிறார்.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 108 ஆம்புலன்ஸ் வரும்போது அதன் ஒளியை கொண்டு பிற வாகனங்கள் தானாக விலகி வழி விட வகை செய்யும் தொழில் நுட்ப வசதிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் கிராமங்களில் ஒரே இடத்துக்கான 108 ஆம்புலன்ஸ் தேவைக்கு பலர் அழைப்பதால் குழப்பம் ஏற்படுவதாகத் தெரிவித்தார். அதனைக் கண்காணிக்கவும், ஆம்புலன்ஸ் வரும் இடத்தை மக்கள் அறியவும், ஒலா, உபேர் போன்ற டிராக்கிங் செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.