​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரே கடையில் பல மாதங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ள 2 பெண்கள்

Published : Feb 20, 2020 7:54 AM



ஒரே கடையில் பல மாதங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ள 2 பெண்கள்

Feb 20, 2020 7:54 AM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒரே துணிக்கடையில் பல மாதங்களாக விலையுயர்ந்த துணிகளைத் திருடி வந்த 2 பெண்களை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

கல்லல் பகுதியில் இயங்கி வரும் அந்த துணிக்கடையின் உரிமையாளர் புகழ், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 பெண்கள் துணி எடுப்பது போல் வந்து அவரது கவனத்தை திசை திருப்பி விலையுயர்ந்த துணிகளை திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சிசிடிவி பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்ததில் அதே பெண்கள் பல சந்தர்ப்பங்களில் கடைக்கு வந்து துணிகளைத் திருடிச் செல்வதைக் கண்டறிந்தார். காவல்நிலையத்தில் புகழ் அளித்த புகாரின் பேரில் அந்த இரண்டு பெஒரே கடையில் பல மாதங்களாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ள பெண்கள்ண்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.