​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
1973-ல் தொலைத்த மோதிரத்தை 2020-ல் திரும்ப பெற்ற மூதாட்டி..

Published : Feb 19, 2020 6:49 PM

1973-ல் தொலைத்த மோதிரத்தை 2020-ல் திரும்ப பெற்ற மூதாட்டி..

Feb 19, 2020 6:49 PM

தனது ஆண் நண்பர் பரிசளித்த மோதிரத்தை 47 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த பெண் ஒருவருக்கு, மீண்டும் அந்த மோதிரம் கிடைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

63 வயதான டெப்ரா மெக்கென்னா (Debra McKenna) 1973-ம் ஆண்டில் உயர்நிலை பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். அப்போது அவரது ஆண் நண்பர் மோதிரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். ஆனால் சில நாட்களிலேயே அந்த மோதிரத்தை அவர் தொலைத்து விட்டார்.

ஒரு தருணத்தில் வெளியிடம் ஒன்றிற்கு சென்று கைகளை கழுவும் போது மோதிரத்தை கழற்றி வைத்த டெப்ரா மெக்கென்னா, மீண்டும் அதை எடுத்து அணிய மறந்து விட்டார். அத்துடன் அந்த மோதிரம் காணாமல் போயிருக்கிறது. இது நடந்து ஏறத்தாழ 47 ஆண்டுகள் ஆகிவிட்டது.

image

மோதிரம் அன்பளிப்பாக கொடுத்த ஆண் நண்பரையே திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்தார் மெக்கென்னா. அவரது கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் சமீபத்தில் டெப்ரா மெக்கென்னாவிற்கு பார்சல் வந்துள்ளது. அதில் அவர் 47 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த மோதிரம் இருந்துள்ளது.

அதனை பார்த்து பேச்சை வராமல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளார் மெக்கென்னா. மோதிரம் மீண்டும் கிடைத்த பின்னணி குறித்து விசாரித்த போது, காடு ஒன்றில் குழிதோண்டி கொண்டிருந்த ஒருவருக்கு இந்த மோதிரம் கிடைத்துள்ளது. அதில் பள்ளியின் பெயர், பட்டமளிப்பு ஆண்டு மற்றும் ஷான் மெக்கென்னா பற்றிய சில குறிப்புக்கள் இருந்துள்ளன.

அதை வைத்து அந்த நபர் டெப்ரா மெக்கென்னா பற்றி விசாரித்து தற்போதைய முகவரியை கண்டுபிடித்து அனுப்பி இருக்கிறார். இதை தெரிந்து கொண்ட மெக்கென்னா உலகில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களில் அதிகமானவர்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்.