​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உ.வே.சாமிநாத ஐய்யர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்து தெரியாமல் போயிருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

Published : Feb 19, 2020 10:32 AM

உ.வே.சாமிநாத ஐய்யர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்து தெரியாமல் போயிருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார்

Feb 19, 2020 10:32 AM

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐய்யரின் 166-வது பிறந்த நாள் விழாவையொட்டி, அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள உருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், உ.வே.சாமிநாத ஐய்யர் இல்லை என்றால், சிலப்பதிகாரம், அகநானூறு, புறநானூறு குறித்து தெரியாமல் போயிருக்கும் என்றார்.

வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டோரை சந்தித்தீர்களா என்ற கேள்விக்கு, திமுக போல ஓடி ஒளியும் கட்சி அதிமுக இல்லை எனவும், தினமும் மக்களை சந்தித்து வருவதாக பதிலளித்தார்.