​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலன் மீண்டும் தப்பாமல் இருக்க காவல் நிலையத்திலேயே திருமணம் - போலீசார் அதிரடி

Published : Feb 18, 2020 5:05 PM



காதலன் மீண்டும் தப்பாமல் இருக்க காவல் நிலையத்திலேயே திருமணம் - போலீசார் அதிரடி

Feb 18, 2020 5:05 PM

சென்னையில் பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டு வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற காதலனை மடக்கிப் பிடித்த போலீசார், காவல்நிலையத்தில் வைத்தே அந்த ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

அனகாபுத்தூரைச் சேர்ந்த கவிதா என்ற பெண்ணும் பொழிச்சலூரைச் சேர்ந்த வெங்கடேசனும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தன்னுடன் கணவன் போல் பழகிவிட்டு, திருமணம் செய்துகொள்ள மறுத்து வெங்கடேசன் வெளிநாடு தப்பிச் செல்ல முயல்வதாக சங்கர்நகர் காவல்நிலையத்தில் கவிதா புகாரளித்தார்.

இதனையடுத்து வெளிநாடு புறப்படும் ஆயத்தப் பணிகளில் இருந்த வெங்கடேஷை மடக்கி காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அங்கு வைத்தே இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர். ’

ஏற்கனவே 3 முறை வெங்கடேஷ் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும் எனவே அறிவுரை கூறி அனுப்பினால் மீண்டும் தப்பிப்போக வாய்ப்பிருந்ததால் திருமணம் செய்துவைத்ததாகவும் போலீசார் கூறினர்.