​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேலவளவு கொலை வழக்கு : 13 பேர் முன்விடுதலையில் இடைக்கால உத்தரவு நீக்கம்

Published : Feb 18, 2020 4:52 PM

மேலவளவு கொலை வழக்கு : 13 பேர் முன்விடுதலையில் இடைக்கால உத்தரவு நீக்கம்

Feb 18, 2020 4:52 PM

மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில், முன்விடுதலையான 13 பேர், ஊருக்குள் நுழைய விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விலக்கிகொண்டது.

ஆயுள் தண்டணை பெற்ற இவர்கள் முன்விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தொடர்ச்சியாக  மனுதாரர் ஆஜராகாததால் வருத்தமளிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கு முடியும் வரை 13 பேரும் ஊருக்குள் நுழையக்கூடாது என்றும், வேலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவுகள் விலக்கிக்கொள்ளப்படுவதாக தெரிவித்து, விசாரணையை மார்ச் 16 ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தனர்.