​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வார்டு உறுப்பினரின் வெற்றியை செல்லாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

Published : Feb 18, 2020 4:17 PM

வார்டு உறுப்பினரின் வெற்றியை செல்லாது என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை

Feb 18, 2020 4:17 PM

கரூர் அருகே சித்தலவாய் ஊராட்சி வார்டு உறுப்பினரின் வெற்றியை செல்லாது என்று அறிவித்த தேர்தல் அலுவலரின்  உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தான் வார்டு உறுப்பினராகி, துணைதலைவரான பின்பு அது பெண்கள் வார்டு என அறிவிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் ராஜா, புகழேந்தி அமர்வு, வேட்புமனு தாக்கல் செய்து, அது ஏற்கப்பட்டு வெற்றி பெற்றபின்பு, துணைத் தலைவராக தேர்வு செய்யப்படும் வரை தேர்தல் ஆணையம் என்ன செய்தது? என  கேள்வி எழுப்பியதுடன், தேர்தல் அலுவலரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.