​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துரத்தி வந்த யானையைப் பார்த்து தெறித்து ஓடாமல் நிதானமாக நின்று தப்பிய பெண்

Published : Feb 18, 2020 2:21 PM



துரத்தி வந்த யானையைப் பார்த்து தெறித்து ஓடாமல் நிதானமாக நின்று தப்பிய பெண்

Feb 18, 2020 2:21 PM

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே தன்னைத் துரத்திய யானைக்கு எதிரே துணிச்சலாக நின்று லாவகமாக  வெளிநாட்டு சுற்றுலாப் பெண் பயணி தப்பிய காட்சிகள் வெளியாகியுள்ளன.

உதகையில் இருந்து முதுமலை வழியாக மைசூர் செல்லும் சாலையில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவர், சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தெப்பக்காடு அருகே சாலையோர மறைவில் இருந்து திடீரென வெளிப்பட்ட யானை ஒன்று அந்தப் பெண்ணை துரத்தத் தொடங்கியது.

சைக்கிளில் இருந்து இறங்கி தள்ளிக்கொண்டே சிறிது தூரம் ஓடிய அந்தப் பெண், பின் சுதாரித்துக் கொண்டு ஓடாமல் நின்றார். அவர் நின்றதைப் பார்த்து யானையும் நிற்கவே, மெல்ல சைக்கிளை பின்னோக்கி தள்ளிக்கொண்டே தப்பினார்.

யானையும் அங்கிருந்து விலகிச் சென்றது. சக சுற்றுலாப் பயணி ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த செல்போன் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.