​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை மையம் அறிவிப்பு

Published : May 11, 2018 11:06 PM

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என தேசிய வானிலை மையம் அறிவிப்பு

May 11, 2018 11:06 PM

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குமென தெரிவித்துள்ளது.

தமிழகம், கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ள தேசிய வானிலை ஆய்வு மையம், தென்னிந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு திசையில் பரவி உள்ள மேகக் கூட்டங்களாலும், வடக்கு உள் கர்நாடகத்தில் இருந்து தெற்கு தமிழ்நாடு வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் உள் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கோடை மழை நீடிக்குமென அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கோடை மழை பெய்யும் என்றும், ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்கு முன்னரே தென் மேற்கு பருவமழை தொடங்கும்  என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.