​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜல்லிக்கட்டு நாயகர் என குறிப்பிட துணை முதலமைச்சர் என்ன மாடுபிடி வீரரா? - துரை முருகன்

Published : Feb 18, 2020 12:14 PM



ஜல்லிக்கட்டு நாயகர் என குறிப்பிட துணை முதலமைச்சர் என்ன மாடுபிடி வீரரா? - துரை முருகன்

Feb 18, 2020 12:14 PM

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிடுவதற்கு அவர் என்ன மாடு பிடி வீரரா என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியதால் சிரிப்பலை எழுந்தது.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் பேசும் போது, ஜல்லிக்கட்டு நாயகர் என்று குறிப்பிட்டு ஓ.பி.எஸ். பெயரை தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய துரைமுருகன், அவர் என்ன மாடுபிடி வீரரா என்றும் இதற்கு முன் காளைகளை அடக்கி இருக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக சிறப்பு அனுமதியை பெற்று தந்ததால் ஓ.பி.எஸ்.ஸை அன்போடு ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாக விளக்கம் தந்தார். மேலும், அடுத்தாண்டு விராலிமலை ஜல்லிக்கட்டில் பார்வையாளராகவோ அல்லது மாடு பிடி வீரராகவோ வரலாம் என்று துரைமுருகனுக்கு அழைப்பு விடுத்தார்.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg