​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5 பெரிய நாடாக முன்னேறும் - ஆய்வில் தகவல்

Published : Feb 18, 2020 9:00 AM

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5 பெரிய நாடாக முன்னேறும் - ஆய்வில் தகவல்

Feb 18, 2020 9:00 AM

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா 5வது பெரிய நாடாக மாறுவதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலக மக்கள்தொகை கணிப்பகம் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை விட இந்தியப் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 புள்ளி 94 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுடன் முன்னேறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில் இங்கிலாந்தின் பொருளாதார அளவு 2 புள்ளி 83 டிரில்லியன் டாலராகவும், பிரான்சின் பொருளதார அளவு 2 புள்ளி 71 டிரில்லியன் டாலராகவும் இருப்பதை அந்த நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்திய மக்களின் வாங்கும் திறன் 10 புள்ளி 51 டிரில்லியன் டாலராக ஆக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அந்த நிறுவம் இந்த அளவுகோல் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விட அதிகம் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனாலும் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 புள்ளி 5 விழுக்காட்டில் இருந்து 5 விழுக்காடாகக் குறையும் என்றும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.