​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
T20 தரவரிசை பட்டியலில் விராட் கோலி எந்த இடம் தெரியுமா ?

Published : Feb 18, 2020 8:45 AM



T20 தரவரிசை பட்டியலில் விராட் கோலி எந்த இடம் தெரியுமா ?

Feb 18, 2020 8:45 AM

டி20 கிரிக்கெட்டுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்தியக் கேப்டன் விராட் கோலி 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 தொடர் ஞாயிறன்று நிறைவடைந்ததையடுத்து, டி20 கிரிக்கெட்டுக்கான தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.

இதில் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பேட்டிங்குக்கான தரவரிசையில் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் காரணமாக விராட் கோலி 10-வது இடத்துக்கு இறங்கியுள்ளார்.

இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 662 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் நீடிக்கிறார். கடந்த சில டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக கலக்கலாக ஆடிய கே.எல் ராகுல் 2-வது இடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தானின் பாபர் அஸாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பந்துவீச்சுக்கான தரவரிசையில் இந்தியப் பந்துவீச்சாளர் பூம்ரா 12-வது இடத்தில் நீடிக்கிறார்.