​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யுபிஎஸ்சிக்கு நிகராக டிஎன்பிஎஸ்சி மாற்றப்படும் : அமைச்சர் ஜெயகுமார்

Published : Feb 17, 2020 7:42 PM

யுபிஎஸ்சிக்கு நிகராக டிஎன்பிஎஸ்சி மாற்றப்படும் : அமைச்சர் ஜெயகுமார்

Feb 17, 2020 7:42 PM

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நிகராக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக திமுக உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

வருங்காலங்களில் இதுபோல நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் யார் தலையீடு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனிடையே, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்ய திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.