​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Published : Feb 17, 2020 6:35 PM



ஏ.ஆர்.முருகதாசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

Feb 17, 2020 6:35 PM

கொலை மிரட்டல் விடுத்ததாக தர்பார் பட விநியோகஸ்தர்கள் மீது அளித்த புகாரை திரும்ப பெற்று கொள்வதாக கூறிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தர்பார் படத்தை வெளியிட்டதில் நஷ்டம் எனக் கூறி விநியோகஸ்தர்கள் மிரட்டல் விடுப்பதால், போலீஸ் பாதுகாப்பு கோரி இயக்குனர் முருகதாஸ் தொடர்ந்த வழக்கு,  விசாரணைக்கு வந்தது.

அப்போது மேற்கொண்டு மிரட்டல் வராது என விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இருந்து இயக்குனர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதால், புகார் மீது காவல்துறை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அவசியம் இல்லை என்றும், புகாரை திரும்பப் பெறுவதாகவும், முருகதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, நீங்கள் நினைத்தபடி நீதிமன்றம் செயல்படவேண்டுமா? என கேள்வி எழுப்பி, பின்னர் வழக்கை முடித்து வைத்தார்.