2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு? ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்
Published : Feb 17, 2020 6:15 PM
2011ஆம் ஆண்டு குரூப் -2 தேர்விலும் முறைகேடு? ஒரே கிராமத்தை சேர்ந்த 12 பேருக்கு சம்மன்
Feb 17, 2020 6:15 PM
2011ஆம் ஆண்டு குரூப்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் ஒரே ஊரை சேர்ந்த 12 பேர் தேர்ச்சி பெற்றதால் சந்தேகம் எழுந்ததையடுத்து, அவர்கள் அனைவரையும் வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முறைகேடு தொடர்பாக புகார்கள் எழுந்ததையடுத்து தொடர் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதனிடையே, கடலூர் மாவட்டம் கிழக்கு ராமாபுரம் என்ற ஒரு ஊரில் ஒரே தெருவைச் சேர்ந்த 12 பேர், 2011ஆம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்று அரசுப் பணியில் சேர்ந்தது சிபிசிஐடியின் கவனத்துக்கு சென்றது.
இவர்கள் முறைகேடாக தேர்வு எழுதியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட 12 பேரும் வருகிற 19ஆம் தேதி கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.