​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் திறப்பு

Published : Feb 17, 2020 6:15 PM

புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் திறப்பு

Feb 17, 2020 6:15 PM

புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று ஸ்வீடன் நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மிதக்கும் மாளிகை லூலே நதியில் வட்ட வடிவமான அமைப்பைக் கொண்டுள்ளது. மரத்தினால் ஆன நடைபாதை வழியே இதனை சென்றடைய முடியும். 'ஆர்க்டிக் பாத்' எனும் மிதக்கும் ஹோட்டலின் நடுவே மிகப்பெரிய ஐஸ் பாத் செய்யுமிடம் உள்ளது.

கட்டடக் கலைஞர்களான பெர்டில் ஹார்ஸ்ட்ரோம் மற்றும் ஜோஹன் கவுப்பி ஆகியோரால் வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டலில் 12 அறைகள் உள்ளன. அனைத்துமே நீர் சூழ்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஹோட்டலில் யோகா, தியானம் ஆகியவற்றுக்கான தனி இடமும், மேலும் குதிரை சவாரி மற்றும் வனவிலங்கு காட்சிகள் உள்ளிட்டவைகளுக்கான இடங்களும் உள்ளன.