​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி

Published : Feb 17, 2020 4:55 PM



TNPSC தேர்வு முறைகேடு விவகாரத்தில் தவறு செய்தோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி

Feb 17, 2020 4:55 PM

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் யார் தலையீடு இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்தார். 

டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், முறைகேடுகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்டார். வருங்காலங்களில் இதுபோல நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய  முதலமைச்ச எடப்பாடி பழனிசாமி, டிஎன்பிஎஸ்சி என்பது தன்னாட்சி அமைப்பு எனவும் அதில் அரசு தலையிடாது எனவும் குறிப்பிட்டார். இதனிடையே, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்ய திமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.