​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு... அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் வாழ்த்து..!

Published : Feb 17, 2020 10:21 AM



முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவு... அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் வாழ்த்து..!

Feb 17, 2020 10:21 AM

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அரசு 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை குறிக்கும் வகையில் சாதனை மலர், குறுந்தகடு வெளியிடப்பட்டது. 

"முத்திரை பதித்த மூன்றாண்டு, முதலிடமே அதற்கு சான்று" என்ற தலைப்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தமிழக அரசின் 3 ஆண்டு சாதனை விளக்க மலர், குறுந்தட்டு, முதலமைச்சர் உரைகள் அடங்கிய நூல் வெளியிடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி இவற்றை வெளியிட, ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் அமைச்சர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.