​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால்.. நிலத்தடி நீர் மாசு..!

Published : Feb 16, 2020 7:19 PM



சுத்திகரிக்கப்படாத கழிவுநீரால்.. நிலத்தடி நீர் மாசு..!

Feb 16, 2020 7:19 PM

ஈரோடு அருகே சுத்திகரிக்கப்படாமல் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு, விவசாயம் பாதிக்கப்படுவதுடன்,சுவாசகோளாறுகள் ஏற்படுவதாகவும், இது போன்ற ஆலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரோடு அருகே பெருந்துறையில் உள்ள 2,710 ஏக்கர் சிப்காட் தொழிற்பேட்டையில், சுமார் 200 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்காமல், சிலர் இரவு நேரங்களில் ரகசியமாக வெளியேற்றுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மாசுபட்டு விவசாய கிணறுகளிலும், ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் சிகப்பு நிறத்துக்கு மாறியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், மக்களுக்கு சுவாசக் கோளாறு, நுரையிரல் நோய், மலட்டுத்தன்மை போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற ஆலைகளை நிரந்தரமாக மூடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, தங்களது தொடர் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் நிலத்தடி நீர் மாசு குறைந்துள்ள நிலையில், மாதம் தோறும் ஆலை நிர்வாகிகள் கூட்டத்தில் இது தொடர்பாக அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்தனர். கிணற்றில் தேங்கியுள்ள கழிவு நீரை இரண்டு மூன்று முறை முற்றிலுமாக அகற்றினால் நீரின் தன்மை நல்ல நிலைக்கு வந்துவிடும் என்றும் குறிப்பிட்டனர்.