​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
CAA- க்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன

Published : Feb 16, 2020 2:48 PM

CAA- க்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன

Feb 16, 2020 2:48 PM

திமுக சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கம் மூலம் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டன. இந்த கையெழுத்து படிவங்களை, டெல்லிக்கு அனுப்பும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

அதில் திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி,வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படிவங்கள் வரும் 19ம் தேதி குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.