​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை கடற்படை அத்துமீறல்... புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் கைது..!

Published : Feb 16, 2020 1:44 PM

இலங்கை கடற்படை அத்துமீறல்... புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர் கைது..!

Feb 16, 2020 1:44 PM

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 11 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை சின்ன அடைக்கலம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சின்னபாண்டி, அவரது மகன் மணிகண்டன், அந்தோணி ஆகிய மூவர் இந்திய கடல்பகுதியில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை படகுடன் சிறை பிடித்து சென்றனர்.

இன்று அதிகாலையில், தமிழக கடற்கரையில் இருந்து 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்த மேலும் 8 மீனவர்களை இலங்கை கடற்படை இரு படகுகளுடன் சிறைபிடித்துச்சென்றது.

11 பேரிடமும் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்திய கடல்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.