​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று

Published : Feb 16, 2020 10:51 AM



டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று

Feb 16, 2020 10:51 AM

ஜப்பான் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருப்போரில் மேலும் 70 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவிற்கு சென்று வந்த டைமன்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் இருப்போரை தனது நாட்டுக்குள் ஜப்பான் முன்னெச்சரிக்கையாக அனுமதிக்கவில்லை. யோகோஹமா துறைமுக பகுதியில் கப்பல் நிறுத்தப்பட்டு, அதிலிருக்கும் 3 ஆயிரத்து 700 பேரும் தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

தற்போது அவர்களில் மேலும் 70 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்கப்பலில் இருப்போரில் வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை 355ஆக உயர்ந்துள்ளது. சீனாவுக்கு வெளியே நேரிட்ட மிகப்பெரிய பாதிப்பாக இது அறியப்படுகிறது.