​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
4ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர்... 3 ஆண்டு கால சாதனைகளை பட்டியிலிட்டுள்ள தமிழக அரசு

Published : Feb 16, 2020 6:27 AM



4ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதலமைச்சர்... 3 ஆண்டு கால சாதனைகளை பட்டியிலிட்டுள்ள தமிழக அரசு

Feb 16, 2020 6:27 AM

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி, இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில், 16 ஆயிரத்து 382 கோப்புகளில் முதலமைச்சர் கையெழுத்திட்டு வளர்ச்சித் திட்ட பணிகள் நிறைவேற்றபட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஆளும் அதிமுக அரசின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி, இன்று நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி, கடந்த மூன்று ஆண்டுகளில் நிகழ்த்திய சாதனைகளை, தமிழ்நாடு அரசு பட்டியலாக வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார குடிமராமத்து திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 930 கோடி ரூபாய் செலவில் 4,955 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் நெடுஞ்சாலை துறையின் மூலம் 22 ஆயிரத்து 96 கோடி ரூபாய் செலவில் 21,109 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 4,921 புதிய பேருந்துகளும், தூங்கும் இருக்கை வசதியுடன் கூடிய 36 பேருந்துகளும், படுக்கை வசதியுடன் கூடிய 106 குளிர்சாதன பேருந்துகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து மாணவர்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 லட்சத்து 58, 654 இளைஞர்களுக்கு குறுகியகால திறன் பயிற்சி அளிக்கப்பட்டு 1 லட்சத்து 34, 992 இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக 231 புள்ளி 72 கோடி ரூபாய் செலவில் குறுவை மற்றும் சம்பா தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், இதன்மூலம் 9 லட்சத்து 83, 435 விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்ததும் பட்டியிலடப்பட்டுள்ளது.

மேலும், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தது போன்று((gfx out)) , கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட எண்ணற்ற வளர்ச்சி திட்டங்கள் துறைவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.