​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இளம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Published : Feb 16, 2020 6:17 AM



சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இளம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

Feb 16, 2020 6:17 AM

சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவியல் பூர்வமான தீர்வு காண இளம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

தலைநகர் டெல்லியில், நாட்டின் இளம் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த உரையாடல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிறந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற, உண்மையான சமூகப் பிரச்சினைகளின் பக்கம் கவனத்தைத் திருப்புமாறும், அவற்றுக்கு அறிவியல் பூர்வமான தீர்வு காணுமாறும் பிரதமர் விஞ்ஞானிகளுக்கு வலியுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இந்தியர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

வேளாண் விளை பொருட்கள், குடிநீர் பாதுகாப்பு போன்றவற்றுக்கும் பிரதமர் அறிவியல் பூர்வமான தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார். 5ஜி தொழில்நுட்பம், ஒயர்லெஸ் தொழில்நுட்பம், செயற்கை திறன் மேம்பாடு, நீண்ட காலம் நீடிக்கும் பாட்டரிகள் குறித்த ஆராய்ச்சிகள் போன்றவற்றில் இளம் விஞ்ஞானிகள் கவனம் செலுத்துமாறும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நமது மரபான ஞானத்தை நவீன அறிவியலுடன் இணைக்கவும் உலகத் தரமான பொருட்களை கண்டுபிடிக்கவும், பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.