​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்ட எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் - மா.கம்யூனிஸ்ட்

Published : May 11, 2018 8:22 PM

பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்ட எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் - மா.கம்யூனிஸ்ட்

May 11, 2018 8:22 PM

பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை வெளியிட்ட பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்யுமாறு, தமிழ்நாடு அரசை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தின்போதும், தேடித்தேடி கைது செய்த காவல்துறை, எஸ்.வி.சேகரை மட்டும், ஒரு மாதத்திற்கும் மேலாக, கைது செய்யாமல் பாரபட்சமாக செயல்படுவது கண்டனத்திற்குரியது என்றும் கூறப்பட்டிருக்கிறது. எஸ்.வி.சேகரின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில், இனியும் காலம் தாழ்த்தாது, உடனடியாக அவரை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது.