​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அ.தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் குறித்து ஆலோசனை

Published : Feb 15, 2020 1:49 PM

அ.தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் குறித்து ஆலோசனை

Feb 15, 2020 1:49 PM

அ.தி.மு.க. வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் ஆகியோர் பல்வேறு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டங்கள் கடந்த 10 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு முதல் இரண்டு நாட்கள் கூட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் அடுத்தடுத்த நாள் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று காலையில் காஞ்சிபுரம், நெல்லை, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது அந்தந்த மாவட்டங்களில் உட்கட்சி விவகாரங்கள், வரவிருக்கும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

தேர்தலில் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெறுவது குறித்த அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டன. பிற்பகலில் சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg