​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையனுக்கு தர்ம அடி

Published : Feb 15, 2020 1:12 PM



வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையனுக்கு தர்ம அடி

Feb 15, 2020 1:12 PM

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையனை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து அடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காரைக்குடியைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியரான அமல்ராஜ் கென்னடி என்பவர் வீட்டை பூட்டிவிட்டு, நிகழ்ச்சியொன்றுக்காக வெளியூர் வந்திருந்த நிலையில், தனது செல்போன் மூலம் வீட்டில் உள்ள CCTV காட்சிகளை வழக்கம்போல கண்காணித்துள்ளார்.

அப்போது, முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் தனது வீட்டில் நடமாடுவதைக் கண்ட அவர், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, மர்ம நபரை மடக்கிப்பிடித்த அக்கம்பக்கத்தினர், தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், அந்நபர் நாகர்கோவிலை சேர்ந்த ராபின் என்பதும் பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய நபர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg