​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதி

Published : Feb 15, 2020 12:40 PM



மெட்ரோ ரயிலில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதி

Feb 15, 2020 12:40 PM

மெட்ரோ ரயில் பயணத்தின் போது சைக்கிள்களை பயணிகள் தங்களுடன் எடுத்துச் செல்ல சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ், தற்போது 42 கி.மீ தூர வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு வசதிகளை செய்து வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது மெட்ரோ ரயிலில் சைக்கிள்களை கொண்டு செல்லலாம் என அறிவித்துள்ளது.

பயணிகள் தங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரும் சொந்த சைக்கிள்களையும், ஸ்மார்ட், மடக்கு சைக்கிள்களையும் பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பிற இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து செலவு குறைவதால், பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg