​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சசிகலாவின் பினாமி எனக் கூறி, பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ்... வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு

Published : Feb 15, 2020 9:02 AM



சசிகலாவின் பினாமி எனக் கூறி, பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ்... வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவு

Feb 15, 2020 9:02 AM

சசிகலாவின் பினாமி எனக் கூறி, தங்கள் நிறுவனத்திற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நோட்டீசை ரத்து செய்யக் கோரி கங்கா ஃபவுண்டேஷன்ஸ் என்ற கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கில் வருமான வரித்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் மனுவில் சென்னை பெரம்பூரில் தாங்கள் கட்டிய ஸ்பெக்ட்ரம் மால் கட்டிடத்தை விற்பனை செய்ய மறைந்த தலைவரது பெயரில் சிலர் நிர்பந்தித்ததாகவும், எனவே 192 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்து, 130 கோடி ரூபாய் மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சியை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தங்கள் தரப்பு கருத்தைக் கேட்காமல் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் மார்ச் 6-க்குள் பதிலளிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். 

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg