​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அருகே பயங்கர விபத்து..! ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

Published : Feb 14, 2020 4:31 PM

சென்னை அருகே பயங்கர விபத்து..! ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

Feb 14, 2020 4:31 PM

சென்னை அருகே சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு ஆந்திராவில் இருந்து ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் சென்னை விமான நிலையத்திற்கு உறவினரை வழி அனுப்ப வந்துள்ளனர். உறவினரை வழிஅனுப்பி வைத்துவிட்டு அதிகாலையில் காரில் புறப்பட்ட அவர்கள் ஆந்திரா திரும்பியுள்ளனர்.

பனங்காடு பகுதியில் கார் சென்றுக் கொண்டிருந்தபோது விதிகளை மீறி தேசிய நெடுஞ்சாலை ஓரம்  நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது  மோதி விபத்திற்குள்ளானது.  இதில் காரில் இருந்த குழந்தை ரியான் செரி, விஜயலட்சுமி, அனுசெல்வியா, நமீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.