​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் ரூ.2000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு மோசடி உறுதி

Published : Feb 14, 2020 2:37 PM



ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் ரூ.2000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு மோசடி உறுதி

Feb 14, 2020 2:37 PM

ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6ம் தேதி ஹைதராபாத், விஜயவாடா, கடப்பா, விசாகப்பட்டினம், டெல்லி, புனே உட்பட 3 பிரபல கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அதில் துணை - ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் போலி ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை ஒதுக்கீடு செய்தது போல் ஆவணங்களை தயார் செய்து வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நிறுவனங்களின் இமெயில், வாட்ஸ் அப் தகவல்கள் மூலம் இந்த வரிஏய்ப்பு மோசடி உறுதி செய்யப்பட்ட நிலையில், கணக்கில் காட்டப்படாத 85 லட்ச ரூபாய் பணம், 71 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 25 வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளதாக நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.