​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறிய தவறு செய்தாலும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் : ஈரான்

Published : Feb 14, 2020 10:20 AM

சிறிய தவறு செய்தாலும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் : ஈரான்

Feb 14, 2020 10:20 AM

அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் சிறிய தவறு செய்தாலும், அந்நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் திடீர் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் சுலைமானி கொல்லப்பட்டதன் 40ம் நாள் நினைவு நிகழ்ச்சி, டெஹ்ரானில் நடைபெற்றது. இதில் பேசிய ஈரான் புரட்சிகர படையின் தளபதி ஹொசைன் சலாமி, அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் மிரட்டல் விடுத்தார். ஈரான் விவகாரத்தில் சிறிய தவறு செய்தாலும் அந்நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் மிரட்டினார்.