​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி

Published : Feb 13, 2020 7:53 PM

மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க அனுமதி

Feb 13, 2020 7:53 PM

மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 24 வார கருவை கலைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.

கணவரை இழந்த தான் ஆடு மேய்க்கச் சென்ற வாய்ப்பை பயன்படுத்தி பக்கத்து வீட்டு முதியவன், மன நல பாதிப்பு மற்றும் வலிப்பு நோய் உள்ள தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும், தற்போது அந்த நபர் சிறையில் உள்ளதாகவும் சிவகங்கையைச் சேர்ந்த பெண் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

தனது மகள் குழந்தை பெற நல்ல உடல், மன நிலையில் இல்லை என்றும் கருவை கலைக்க உத்தரவிடவும் கோரியிருந்தார். இந்த வழக்கில் மனுதாரரின் மகள் 24 வார கருவைக் கலைப்பதற்கான உடல் தகுதியுடன் இருப்பதாக , சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கருவை கலைக்கவும், வழக்கு நிலுவையில் இருப்பதால் டி.என்.ஏ. பரிசோதனைக்காக கருவை எடுத்து பாதுகாக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.