​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு என மு.க.ஸ்டாலின் புகார்

Published : Feb 13, 2020 1:28 PM

ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடு என மு.க.ஸ்டாலின் புகார்

Feb 13, 2020 1:28 PM

டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகள் தொடர்பான கைதுப்படலங்கள் நீடித்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தனது முகநூல் பதிவில், சேலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அதிகமாகத் தேர்வானது குறித்து சந்தேகம் எழுப்பும் சில தேர்வர்கள், அது சம்பந்தமாக முதலமைச்சரிடம் புகார் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதற்கான விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

குரூப்-1, குரூப்-2A, கிராம நிர்வாக அலுவலர் தேர்வு, காவலர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு என அணிவகுக்கும் குற்றங்களை தொகுத்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.