​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது என்ற கேள்விக்கே இடமில்லை - சுனில் அரோரா திட்டவட்டம்

Published : Feb 12, 2020 3:57 PM



வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது என்ற கேள்விக்கே இடமில்லை - சுனில் அரோரா திட்டவட்டம்

Feb 12, 2020 3:57 PM

எத்தனை, எத்தனை விமர்சனங்கள் எழுந்தாலும், வாக்குச்சீட்டு முறைக்கு மாறுவது என்ற கேள்விக்கே இடமில்லை என, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கிறார்.

டெல்லியில் பிரபல ஆங்கில செய்தித் தொலைக்காட்சியின் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒரு காரைப் போல, ஒரு பேனாவைப் போல செயல்படும் என்றும், அது சில தருணங்களில் பழுதாக கூடும் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால், ஒருபோதும், அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினுள் ஊடுருவுவவோ, ஹேக் செய்து தகவல்களை மாற்றியமைக்கவோ முடியாது என சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். 20 ஆண்டுகளாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் முழுவீச்சில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சுட்டிக்காட்டியிருக்கிறார்.