​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரூ.1 கோடி நகை கொள்ளையில் கடை ஊழியர்களுக்கு தொடர்பா ? - போலீசார் விசாரணை

Published : Feb 12, 2020 12:20 PM

ரூ.1 கோடி நகை கொள்ளையில் கடை ஊழியர்களுக்கு தொடர்பா ? - போலீசார் விசாரணை

Feb 12, 2020 12:20 PM

சேலம் அருகே பேருந்தில் ரூபாய் 1 கோடி வைர நகை கொள்ளையில், நகை கடை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தைச்சேர்ந்த நகைக்கடை ஊழியர் கவுதம், ஆம்னி பேருந்தில் கோவை சென்றபோது சேலம் அருகே இந்த சம்பவம் நடந்தது. பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சியில் வைகுந்தம் அருகே  உணவு விடுதியில் நின்ற போது மர்ம ஆசாமி ஒருவர் கொள்ளையடித்துச் செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து போலீசார் ஐதராபாத், கர்நாடகா, கேரளா, தர்மபுரி ஆகிய இடங்களுக்கு விரைந்துள்ளனர். மேலும், கவுதம் நகைகளை எடுத்து வந்தபோது, மர்மநபர் பின்தொடர்ந்து வந்தாரா,  நகை கடை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா ?என்று விசாரணை நடைபெற்றுவருகிறது.