​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுழற்றியடித்த சபின் புயலால் ஜெர்மனியில் தரை வழி, வான்வழி போக்குவரத்து ஸ்தம்பித்தது

Published : Feb 11, 2020 7:01 PM

சுழற்றியடித்த சபின் புயலால் ஜெர்மனியில் தரை வழி, வான்வழி போக்குவரத்து ஸ்தம்பித்தது

Feb 11, 2020 7:01 PM

ஜெர்மனியில் சுழற்றியடித்த சபின் புயலால் பல இடங்களில் தரை வழி மற்றும் வான்வழி போக்குவரத்து ஸ்தம்பித்தது.

பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் வடக்குப்பகுதிகளில் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றாலும் வெளுத்து வாங்கிய கனமழையாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல், மோசமான வானிலை காரணமாக ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் 180 விமானங்களின் புறப்பாடு, வருகை ரத்து செய்யப்பட்டது. ஹாம்பர்க், பெர்லின் உள்ளிட்ட இடங்களிலும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.