​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10 வகுப்பு மாணவியை வீட்டில் அடைத்து வைத்து 6 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன்

Published : Feb 11, 2020 5:31 PM

10 வகுப்பு மாணவியை வீட்டில் அடைத்து வைத்து 6 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன்

Feb 11, 2020 5:31 PM

கும்பகோணம் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை ஆறு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது கல்லூரி மாணவன் போலீசாரிடம் சிக்கினான்.

அரசு பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியிடம், முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவன் நட்பாக பழகியுள்ளான். இதனை பயன்படுத்தி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற அவன், தொடர்ந்து ஆறு நாட்களாக அடைத்து வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதற்கிடையே பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி மாணவரின் வீட்டில் இருந்து மாணவியை மீட்டனர்.

தனது பெற்றோர் வெளிநாட்டில் இருப்பது ஏதுவாக அமைந்ததால், பள்ளி மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் மாவட்ட நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சை சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கல்லூரி மாணவனை ஒப்படைத்தனர்.