​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Published : Feb 11, 2020 3:08 PM

தஞ்சை பெரிய கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Feb 11, 2020 3:08 PM

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிசேகம் முடிந்து 6 நாள்கள் ஆனநிலையிலும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதுகிறது.

பெரிய கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 5ம் தேதி வெகுவிமரிசையாக கும்பாபிசேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிசேகம் முடிந்து இன்றுடன் 6 நாள்கள் ஆகின்ற நிலையில், கோயிலுக்கு வரும் கூட்டம் குறையவில்லை. தஞ்சை மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்தனர்.

ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். கோயிலில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருப்பதுடன், பக்தர்கள் அனைவரும், மெட்டல் டிடெக்டர்களால் சோதிக்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர்.