​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நகை வியாபாரியிடம் போலி நகை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி

Published : Feb 11, 2020 2:36 PM

நகை வியாபாரியிடம் போலி நகை கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி

Feb 11, 2020 2:36 PM

கன்னியாகுமரி அருகே, நகை வியாபாரியிடம் போலி நகையை கொடுத்து ஏமாற்றி 5 லட்ச ரூபாய் மோசடி செய்த வட மாநில இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தெற்கு சூரங்குடியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவர் நகை கடை நடத்திவருகிறார். இவரது கடைக்கு வந்த வட மாநில இளைஞர்கள் இருவர் சிறு துண்டு தங்கத்தைக் கொண்டுவந்து காட்டி இதேபோல 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை தங்களிடம் இருப்பதாகவும் அதை குறைந்த விலைக்கு தாங்கள் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய பழனியப்பன், வடசேரி பேருந்து நிலையம் அருகே வைத்து அந்நபர்களிடம் 5 லட்ச ரூபாய் கொடுத்து, நகையை வாங்கியுள்ளார்.

பின்னர் கடைக்கு வந்து சோதித்தபோது அது போலி நகை என தெரியவந்தது. இது தொடர்பாக புகாரளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.