​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி - சினிமா பாணியில் கடைசி நிமிடத்தில் தடுத்த போலீசார்

Published : May 11, 2018 4:09 PM

15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயற்சி - சினிமா பாணியில் கடைசி நிமிடத்தில் தடுத்த போலீசார்

May 11, 2018 4:09 PM

38 வயதான நபருடன் 15 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை சினிமா பாணியில் போலீசார் கடைசி நிமிடத்தில் தடுத்து நிறுத்தி சிறுமியை மீட்டனர். ஹைதராபாத்தை அடுத்த சைபர்பாத்தில் ரமேஷ் என்பவர், தமது வீட்டிற்கு வாடகைக்கு வந்தவர்களின் பணக்கஷ்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தமது கைமாறுகளுக்குப் பிரதிபலனாக சிறுமியை மணமுடிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

நேற்று கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தக்க நேரத்தில் தகவல் கிடைத்ததால் போலீசார் சிறுமியை மீட்டு சிறார் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.