​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஜினியுடன் கூட்டணியா? - ராமதாஸ் பதில்

Published : Feb 11, 2020 12:25 PM

ரஜினியுடன் கூட்டணியா? - ராமதாஸ் பதில்

Feb 11, 2020 12:25 PM

நடிகர் ரஜினியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்றும், அவர் கட்சி ஆரம்பித்த பிறகு கூட்டணி அமைப்பது குறித்து யோசனை நடத்தப்படும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பாமக வடக்கு மண்டல அலுவலகத்தில் அக்கட்சியால் தயாரிக்கப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டார். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தபோது பாமக வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் இதுவும் ஒன்று என்றார்.

முரசொலி அலுவலக விவகாரத்தை பாமக கைவிடாது எனவும், இதுகுறித்து பாமக தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் ராமதாஸ் குறிப்பிட்டார்.