​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
5 மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் 2வது நாளாக ஆலோசனை

Published : Feb 11, 2020 12:15 PM

5 மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் 2வது நாளாக ஆலோசனை

Feb 11, 2020 12:15 PM

கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் 2ஆவது நாளாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிய ஆலோசனை, 2ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்றைய ஆலோசனையில்  திருவண்ணாமலை, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அவர்களுடன் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்றைய கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏப்ரல் மாத இறுதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்திருந்ததாக தகவல் வெளியானது. அதுகுறித்து இன்றும் ஆலோசனை நடத்தப்படுகிறது.