மணமான 8-வது நாளில் கணவரை கொலை செய்த இளம்பெண்

Posted on : 30/11/-0001
Views : 39
Category : News Stories

பண்ருட்டி குட்டைத் தெருவைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், சான்றோர்பாளையத்தை சேர்ந்த விஜி என்ற 22 வயது பெண்ணுக்கும் இம்மாதம் 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 10-ஆம் தேதி மாலை, ரமேஷின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப்போட்டு அவரது மனைவி விஜி கொலை செய்தார். கணவர் அழகாக இல்லை என ஊரார் கேலி செய்ததால், அவமானத்தில் ஆத்திரம் ஏற்பட்டு விஜி கொலை செய்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், கொலைக்கான காரணம் பாலியல் துன்புறுத்தலே என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட ரமேஷ் – விஜி திருமணத்தில், விஜி விருப்பமில்லாமல் இருந்துள்ளார். தனது எதிர்ப்பை பெற்றோரிடம் தெரியப்படுத்தியும், அவர்கள் கட்டாய திருமணம் செய்துவைத்துள்ளனர். திருமணம் முடிந்த எட்டாவது நாளில், 10-ஆம் தேதி மாலை 4 மணியளவில் வேலை முடிந்து வீடு திரும்பிய ரமேஷ் விஜியை தாம்பத்யத்திற்கு அழைத்துள்ளார். ஆனால், விஜி இதற்கு உடன்படாத நிலையில், ரமேஷ் அவரை கட்டாயப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.மேலும், உனக்கு விருப்பமில்லை என்றால், உன் தாயை என்னிடம் அனுப்பு என்று ரமேஷ் கூறியதாக விஜி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். அவதூறான வார்த்தைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களால் ஏற்பட்ட விரக்தி ஆத்திரமாக மாறியதால் கணவர் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்ததாகவும் விஜி வாக்குமூலம் அளித்துள்ளார்.கடமைக்காக திருமணம் செய்து வைப்பதும், பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ விருப்பமில்லாதபோதும் அவர்களை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தராது என்பதற்கு ரமேஷ் – விஜி திருமணம் ஒரு எடுத்துக்காட்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன