​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய முன்னாள் அமைச்சர் - சுங்கக் கட்டணம் வசூலித்ததால் ஆத்திரம்

ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான ஜீத்மல்காந்த் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பன்ஸ்வாடா ((Banswada)) என்ற இடத்தில் தனது ஆதரவாளர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலித்ததற்காக சுங்கச்சாவடி ஊழியர்களை அவர் தாக்கினார்....

திருச்சியில் பொன்மலை ரயில்வே பணிமனைக்கு 5 ஸ்டார் மதிப்பீடு

திருச்சியில் பொன்மலை ரயில்வே பணிமனை சிறந்த மின் ஆற்றல் திறனுக்கான 5 ஸ்டார் மதிப்பீட்டை பெற்றுள்ளது. நீராவி என்ஜின்கள் தயாரிப்பு, டீசல் மற்றும் நீராவி என்ஜின்களை பழுது பார்த்து பராமரித்தல் சரக்கு பெட்டிகள் தயாரித்தல், பயணிகள் மற்றும் சரக்கு பெட்டிகளை பழுது...

கடலூரில் Airtel, Vodafone செல்போன் சேவையில் பாதிப்பு - பொதுமக்கள் அவதி

கடலூரில் காலை முதல் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்களின் செல்போன் சேவை பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏர்செல் நிறுவனத்தின் சேவை பாதிக்கப்பட்டு நிறுவனமே திவால் ஆனது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதலே கடலூர் பகுதியில் ஏர்டெல் மற்றும்...

வெளிநாடுகளில் உடல்உழைப்பு சார்ந்த பணிக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவு

வெளிநாடுகளில் உடல்உழைப்பு சார்ந்த பணிக்காக செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015 முதல் 2017 வரையிலும் பாதியாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்காசிய நாடுகள் உட்பட 18 வெளிநாடுகள் உடல் உழைப்பு சார்ந்த இந்தியர்களின் தேர்வாக கருதப்படுகின்றன. இந்த நாடுகளில், 2015ம் ஆண்டில் சுமார்...

தஞ்சை - திருச்சி இடையே இரட்டை ரயில்பாதை இறுதிக்கட்ட பணிகள்

தஞ்சை திருச்சி இடையிலான இரட்டை ரயில் பாதை அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு நகரங்களிடையே 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு 450 கோடி ரூபாய் செலவில், இரட்டை ரயில்பாதை அமைக்கப்படுகிறது. இதில் 13 பெரிய பாலங்கள், 90 சிறிய...

ஆசிரியர்கள் பணிக்கு வராததால் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை அருகே, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.  செம்மணந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் அன்பழகன், பட்டதாரி ஆசிரியர் சுகந்தி உள்ளிட்டோர் மாணவர்கள் மத்தியில்...

சென்னையில் ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏர்செல் அலுவலகத்தில் ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம் திவால் ஆனதை அடுத்து, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் மற்ற தொலைத்தொடர்ப்பு நிறுவனங்களின் சேவைக்கு மாறி வருகின்றனர். செல்போன் எண்ணை மாற்றாமல், ஒரு...

ஸ்ரீரங்கம் கோபுரத்திற்கு அருகில் கட்டடப் பணி தடுத்து நிறுத்தம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் ராஜ கோபுரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தொடங்கிய கட்டடப் பணி இந்து அறநிலையத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 21 கோபுரங்களைக் கொண்ட இக்கோவிலின் ராஜகோபுரம் 220 அடி உயரம் கொண்டது. 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த இதனை பாதுகாக்கும்...

3 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், நூற்பாலையில் பணியாற்றும் 13 பேரை கைது செய்து விசாரணை

திண்டுக்கல் அருகே நூற்பாலையில் பணியாற்றிய 3 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தில், அதே நூற்பாலையைச் சேர்ந்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் திருச்சி சாலையில் வடமதுரை அருகே  பண்ணாரி நூற்பாலை  இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த...

மீட்புப் பணிகளில் அரசின் செயல் பாராட்டுக்குரியது - மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

குரங்கணி காட்டுத்தீ மீட்புப் பணிகளில் அரசின் செயல் பாராட்டுக்குரியது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தைப் பாடமாக எடுத்துக் கொண்டு இனிவரும் காலங்களில் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்க...